'வாழ்க்கைப் பயணத்திலே' என்ற நூலை வாசித்தால், புது உத்வேகம் பெறுவர் என்பது நிச்சயம். 'ஊக்கமது கைவிடேல்' என்று அவ்வைப் பாட்டி சொன்னார். 'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்' என்கிறார் திருவள்ளுவர். எல்லாம் இருப்பினும், புரிந்து கொள்ளாதோருக்கு அருகமர்ந்து ஒருவர் இதம் பதமாகப் பேசி, எண்ணற்ற நற்செய்திகளை எடுத்துரைத்தால் எவ்வளவு பேருதவியாக இருக்கும்? அன்பும் அரவணைப்புமாகப் பேசப்படும் பேச்சு கல்லாய் இறுகிக்கிடக்கும் மனத்தையும் இளக்கி, ஆறுதல் படுத்திவிடுமல்லவா? இதைத்தான் செய்கிறது இந்த நூல்.நிறைய மேற்கோள்கள், ஆங்காங்கே பழமொழிகள், அவசியமான இடங்களில் அருமையான திருக்குறள்கள், குட்டிக் கதைகள் என ஒவ்வொரு தலைப்பிலான கட்டுரையும் விரைந்து நடைபோடுவதால், நூலை ஒரே மூச்சில் படித்து முடித்து விட முடிகிறது. மொத்தம் முப்பத்தாறு தலைப்புகளில் வாழ்வியலை வகைப்படுத்தி எழுதியிருக்கிறார். தன்னம்பிக்கை நூல்கள் என்னும் பூஞ்சோலையில் பூத்திருக்கும் இந்தப் புதிய மலர் எல்லோர் மனத்தையும் கவரும். இதன் நறுமணம், இதை வாசிப்பவருக்கு இதமான சுக நலன்களை வாரி வழங்கும் என்பது உறுதி.
- Available now
- New eBook additions
- New teen additions
- Most popular
- Try something different
- See all ebooks collections
- Available now
- New audiobook additions
- Most popular
- Try something different
- See all audiobooks collections